எலந்தங்குடி கிராமத்தில் ஐ.ஓ.பி., வங்கி உள்ளது. இந்த ஊரிலிருந்து அதிகம் பேர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்துவருவதால், இவ்வங்கியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் வங்கியின் முன் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று மெயின் கதவை திறக்க முயன்றுள்ளனர். மர்ம நபர்கள் கதவை தொட்டதும் பாதுகாப்பு அலாரம் ஒலித்துள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், வங்கியை நோக்கி ஓடிவந்துள்ளனர். அதை பார்த்த மர்ம நபர்கள், மக்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். வங்கி மேலாளர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி. தினமலர் நாள் டிசம்பர் 20,2009,