அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, March 14, 2010

செய்தி

பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!


பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.

பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.

அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:

http://arabnews.com/saudiarabia/article29180.ece


Wednesday, March 10, 2010

செய்தி

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!


ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.


இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

http://www.tmmk.in/images/stories/islamic-bank.gif
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கிசேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.


இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன்பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.


முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளைமேற்கொள்ளும்.


தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதைமுழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.


மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.