பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!
பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.
பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.
அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:
http://arabnews.com/saudiarabia/article29180.ece