ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.
1. தொடர்ந்து ஒரேயடியாக மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்(ஒரு 20 நிமிடங்கள்).
எல்லா பாடங்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள்.இடம் மாற்றி மாற்றிப் படித்தால்தான் மனதில் நன்றாகப் பதியும்.
2. தொடர்ந்து ஒரே Subject பாடங்களை படிக்காதீர்கள். ஒரு Subject-ல் ஒரு பாடம் படித்ததும் வேறு Subject-ல் உள்ள பாடங்களை எடுத்துப் படியுங்கள்.
பாடங்களைப் புரிந்து படியுங்கள்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
3. பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது –Revision பார்ப்பது அவசியம். Revision தேர்வுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
4. ஆசிரியர் திருத்திக் கொடுக்கும் உங்கள் விடைத்தாள்களை திரும்பவும் பார்வையிடுங்கள்.நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள்.
5. ஒரு பாடத்தை படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு படித்ததை மனதுக்குள் அசை போடுங்கள். இது அவசியம். படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் ஒரு சிறந்த திறமை ஆகும்.
படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பதும் அவசியம்.
6. குறிப்பாக கணக்குப் பாடங்களை எழுதிப் பார்த்துதான் படித்திட வேண்டும்.
கணக்குப் பாடங்களில் வரும் (Formula) சூத்திரங்களை ஒரு பேப்பரில் ஸ்கெட்ச் பெண் கொண்டு எழுதி சுவரில் மாட்டி வைத்து தினமும் இரு தடவை அதைப் பார்வையிடுங்கள்.
7. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் நட்பு அவசியம்.
சினிமா, டீவி, கிரிக்கெட் போன்ற உங்களைப் படிப்பிலிருந்து திசை திருப்பும் விஷயங்களை ஒத்திப் போட்டு விடுங்கள்.
8. உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபம் வேண்டாம். பதற்றம் வேண்டாம். இவை உங்களின் நினைவாற்றலை அதிகம் பாதிக்கும்.
இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதைவிட அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது.
9. இரவில் குறைந்தது 6 மணி நேரம் அவசியம் தூங்குங்கள். இல்லாவிட்டால் தேர்வு அறையில் தூங்கிவிட வாய்ப்புண்டு.
10. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். அப்போதுதான் மூளை நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
11. சிறிது உடற்பயிற்சியும் அவசியம்.
12. நன்றாகப் படிப்பவர்கள் மிக அதிக மதிப்பெண்பெற முயற்சி செய்யுங்கள்.
13. சுமாராகப் படிப்பவர்கள் நிச்சயம் நாம் Pass ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
14. கடின உழைப்புக்கு மாற்று கிடையாது என்பதை மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Thursday, November 12, 2009
தேர்வில் வெற்றி பெறும் வழிகள்
ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி
ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)