அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 12, 2009

தேர்வில் வெற்றி பெறும் வழிகள்

ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.

1. தொடர்ந்து ஒரேயடியாக மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்(ஒரு 20 நிமிடங்கள்).
எல்லா பாடங்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள்.இடம் மாற்றி மாற்றிப் படித்தால்தான் மனதில் நன்றாகப் பதியும்.
2. தொடர்ந்து ஒரே Subject பாடங்களை படிக்காதீர்கள். ஒரு Subject-ல் ஒரு பாடம் படித்ததும் வேறு Subject-ல் உள்ள பாடங்களை எடுத்துப் படியுங்கள்.
பாடங்களைப் புரிந்து படியுங்கள்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
3. பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது –Revision பார்ப்பது அவசியம். Revision தேர்வுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
4. ஆசிரியர் திருத்திக் கொடுக்கும் உங்கள் விடைத்தாள்களை திரும்பவும் பார்வையிடுங்கள்.நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள்.
5. ஒரு பாடத்தை படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு படித்ததை மனதுக்குள் அசை போடுங்கள். இது அவசியம். படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் ஒரு சிறந்த திறமை ஆகும்.
படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பதும் அவசியம்.
6. குறிப்பாக கணக்குப் பாடங்களை எழுதிப் பார்த்துதான் படித்திட வேண்டும்.
கணக்குப் பாடங்களில் வரும் (Formula) சூத்திரங்களை ஒரு பேப்பரில் ஸ்கெட்ச் பெண் கொண்டு எழுதி சுவரில் மாட்டி வைத்து தினமும் இரு தடவை அதைப் பார்வையிடுங்கள்.
7. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் நட்பு அவசியம்.
சினிமா, டீவி, கிரிக்கெட் போன்ற உங்களைப் படிப்பிலிருந்து திசை திருப்பும் விஷயங்களை ஒத்திப் போட்டு விடுங்கள்.
8. உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபம் வேண்டாம். பதற்றம் வேண்டாம். இவை உங்களின் நினைவாற்றலை அதிகம் பாதிக்கும்.
இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதைவிட அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது.
9. இரவில் குறைந்தது 6 மணி நேரம் அவசியம் தூங்குங்கள். இல்லாவிட்டால் தேர்வு அறையில் தூங்கிவிட வாய்ப்புண்டு.
10. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். அப்போதுதான் மூளை நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
11. சிறிது உடற்பயிற்சியும் அவசியம்.
12. நன்றாகப் படிப்பவர்கள் மிக அதிக மதிப்பெண்பெற முயற்சி செய்யுங்கள்.
13. சுமாராகப் படிப்பவர்கள் நிச்சயம் நாம் Pass ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
14. கடின உழைப்புக்கு மாற்று கிடையாது என்பதை மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!