Tuesday, November 3, 2009
சமுதாய செய்தி
உனது திரையானது எங்கள் கௌரவத்தின் கோட்டையாகும்.
மனித வர்க்கமென்னும் தீபஜோதிக்கு நீதான் வெளிச்சத்தை அளித்து வருகிறாய்...
தீனுடைய ஆவேசம் உனது உயிர்க்குளேதான் உறைந்து கிடக்கிறது.
ஆனால் நவின காலம் தேக சுகத்தையே லட்சியமாகக் கொண்டுள்ளது.
தேகத்தை விற்று விடவும் துணிவு கொண்டுள்ளது.
சூழ்ச்சி நிறைந்த காலமானது விலையுயர்ந்த ஒழுக்கத்தை அப்படியே ஜீரணித்து கொண்டிருக்கிறது.அகப்பார்வை இழந்த பெண்களின் செயல்களில் அச்சமில்லை! கூச்சமில்லை!!
அந்நிய ஆடவர்களுடன் உராய்ந்து பழகுமாறு அறிவிழந்த பெண்களைச் செய்துவிட்டது.
மகளே!காலத்தின் கொள்ளைப்பிடுங்களில் சிக்கி விடாதே!!
கவனமாக ஒதுங்கி வாழ்வாயாக!!!